தவறாக அழைத்த இயக்குநர்... கொந்தளித்த நடிகை: 'கமிட்மென்ட்' பெயரில் நடந்த அநாகரீகம்

சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
தவறாக அழைத்த இயக்குநர்... கொந்தளித்த நடிகை: 'கமிட்மென்ட்' பெயரில் நடந்த அநாகரீகம்
Published on

ஐதராபாத்,

பிரபல காமெடி நிகழ்ச்சியான ‘ஜபர்தஸ்த்’ மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் சினிமா துறையில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

ஐஸ்வர்யா பேசுகையில்: "ஆரம்பத்தில் ‘கமிட்மென்ட்’ என்றால் வேலை மீதான அர்ப்பணிப்பு என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், சில இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் அதை தவறாக பயன்படுத்துவதை அறிந்தபோது கோபம் வந்தது.

Also Read
'ஜனநாயகன்' பட லீக் விவகாரம்: கைதான 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
தவறாக அழைத்த இயக்குநர்... கொந்தளித்த நடிகை: 'கமிட்மென்ட்' பெயரில் நடந்த அநாகரீகம்

ஒருமுறை என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்ற ஒரு இயக்குநருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரத்தில் அவரை அடித்துவிட்டேன்," என்று கூறியுள்ளார். எனினும், அந்த இயக்குநரின் பெயரை அவர் வெளிப்படுத்தவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com