

சென்னை,
மல்யுத்தப் போட்டிகளின் மூலம் உலகம் முழுவதும் உள்ள அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் ஜான் சீனா. சமீபத்தில் இவர் மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். இவர் பல படங்களிலும் நடித்திருக்கிறார்.
தற்போது இவர் 'ஜாக்பாட்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குனர் பால் கெக் இயக்கியுள்ளார். ஜான் சீனா, அக்வாபினா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படம் வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாக உள்ளது
View this post on Instagram