ராம்சரணுடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்

இந்திப் படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் முதல்முறையாக தெலுங்கில் ஜுனியர் என்.டி.ஆருடன் தேவாரா படத்தில் நடித்துள்ளார்.
ராம்சரணுடன் ஜோடி சேரும் ஜான்வி கபூர்
Published on

மும்பை,

தயாரிப்பாளர் போனி கபூருக்கும் மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கும் மகளாக பிறந்தவர் ஜான்வி கபூர். 1997ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி மும்பையில் பிறந்த ஜான்வி கபூர் மராத்தியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற சைரத் படத்தின் இந்தி டப்பிங் படமாக தடக் படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமானார். சாதி வெறியால் திருமணமாகி வீட்டை விட்டு வெளியூருக்கு சென்று வாழ்ந்து வரும் ஜோடியினரை தேடிச் சென்று வெட்டுவது போன்ற கெளரவக் கொலையை அடிப்படையாகக் கொண்டு உருவான கதையில் முதன் முறையாக நடித்து கவனத்தை ஈர்த்தார் ஜான்வி கபூர்.

கோலமாவு கோகிலா, ஹெலன் ரீமேக் என பல ரீமேக் படங்களில் நடித்து வந்த ஜான்வி கபூர் கொரட்டலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர். நடித்து வரும் தேவரா படத்தில் ஹீரோயினாக நடித்து தென்னிந்தியாவில் அறிமுகமாக காத்திருக்கிறார்.

நடிகை ஜான்வி கபூர் அமெரிக்க பாப் பாடகி ரிஹானாவுடன் அம்பானி மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தில் படு கவர்ச்சியாக நடனமாடி ரசிகர்களை கவர்ந்தார்.

இந்தநிலையில், ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு ஜுனியர் என்.டி.ஆர். நடித்து வரும் தேவரா படத்தில் நடித்து வரும் ஜான்வி கபூர் அடுத்ததாக ராம்சரண் நடிப்பில் உருவாக உள்ள ஆர்சி 16 படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமாகி உள்ளார்.  ஜான்வி கபூர் இன்று தனது 27-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com