ஜெய், யோகி பாபு நடிக்கும் “ஒர்க்கர்” பட பூஜை

வினய் கிருஷ்ணா இயக்கத்தில் ஜெய், யோகி பாபு, ரீஷ்மா நனையா நடிக்கும் ‘ஒர்க்கர்’ பட பூஜை புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
ஜெய், யோகி பாபு நடிக்கும் “ஒர்க்கர்” பட பூஜை
Published on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஜெய் தற்போது ஒர்க்கர் என்ற புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதில் ஜெய்க்கு ஜோடியாக ரீஷ்மா நனையா நடிக்கிறார். வினய் கிருஷ்ணா இயக்கும் இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், நாகினீடு, பரத் கல்யாண், பிரவீனா, ஸ்ரீஜா ரவி, சசி லயா, வெங்கட் செங்குட்டுவன் ஆகியோர் இப்படத்தில் நடிக்கிறார்கள்.

உண்மை உணர்வுகள், சுவாரஸ்யமான கதை, ரசிகர்களை கவரும் தருணங்களால் "ஒர்க்கர்" திரைப்படம் நிறைந்திருக்கும் என்று இயக்குநர் வினய் கிருஷ்ணா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த லட்சிய முயற்சியை ப்ரிமுக் பிரசன்ட்ஸ் நிறுவனம் சார்பாக ஷோபனா ராணி தயாரிக்கிறார். அஞ்சி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஒர்க்கர் படத்தின் பூஜை படக்குழுவினர் கலந்துக் கொள்ள சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. மேலும் இதன் படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற இருக்கிறது. விரைவில் படத்தின் பிற தகவல்களும் வெளிவரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com