வைரலாகும் 'ஜெய் அனுமான்' படத்தின் புதிய புகைப்படம்

'ஜெய் அனுமான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா பகிர்ந்துள்ளார்.
'Jai Hanuman' director Prashant Verma shared the shooting photo
Published on

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில் தயாரான 'அனுமான்' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை அமிர்தா ஐயர் நடித்தார். இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வினய் ராய், கெட்டப் சீனு, ராஜ் தீபக் ஷெட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்த இந்த படத்தை பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே.நிரஞ்சன் ரெட்டி தயாரித்தார். இந்த படத்தில் வெற்றியைத்தொடர்ந்து, இதன் தொடர்ச்சியாக 'ஜெய் அனுமான்' படத்தை இயக்குனர் பிரசாந்த் வர்மா இயக்கி வருகிறார்.

விரைவில் இப்படத்தில் நடிக்க உள்ள நடிகர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்று இயக்குனர் தெரிவித்திருந்தார். அதன்படி, இந்த படத்தில் காந்தாரா நடிகர் ரிஷப் ஷெட்டி அனுமானாக நடிப்பதாக சமீபத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் பிரசாந்த் வர்மா, 'ஜெய் அனுமான்' படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், அனுமான் தோற்றத்தில் இருக்கும் ரிஷப் ஷெட்டியும் இயக்குனர் பிரசாந்த் வர்மாவும் பேசும்படி உள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

View this post on Instagram

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com