’திரிஷ்யம் 3’...அக்சய் கண்ணாவுக்கு பதில் இவரா?

’திரிஷ்யம் 3’ படத்திலிருந்து நடிகர் அக்சய் கண்ணா விலகியதாக கூறப்படுகிறது.
சென்னை,
மிகவும் எதிர்பார்க்கப்படும் ஸ்பை திரில்லர் படங்களில் ஒன்றான ’திரிஷ்யம் 3’ படத்திலிருந்து நடிகர் அக்சய் கண்ணா விலகியதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது. தற்போது இப்படத்தில் அவருக்கு பதிலாக ஜெய்தீப் அஹ்லாவத் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தயாரிப்பாளர்கள் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், இணையத்தில் இந்த தகவல் வேகமாக பரவி வருகிறது. அக்சய் கண்ணா இப்படத்திற்காக ரூ.21 கோடி சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை வழங்க தயாரிப்பாளர்கள் விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் படத்திலிருந்து வெளியேறியதாக தெரிகிறது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், விக்கி கவுஷலின் சாவா படத்தில் ஔரங்கசீப்பாக நடித்து அனைவரையும் கவர்ந்தவர் அக்சய் கண்ணா. அப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.
தற்போது ரன்வீர் சிங்கின் துரந்தர் படத்தில் நடித்து மீண்டும் ரசிகர்களை கவர்ந்தார். இப்படமும் மிகப்பெரிய பிளாக்பஸ்டராக அமைந்தது.
இப்போது படங்களில் அவரது தேவை அதிகரித்து வரும் நிலையில், அக்சய் கண்ணா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தெரிகிறது.






