தேவா குரலில் “ஜெயில் மேட்ஸ்” படத்தின் முதல் பாடல் வெளியானது

கே.பி ஜெகன் நடிக்கும் ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.
தேவா குரலில் “ஜெயில் மேட்ஸ்” படத்தின் முதல் பாடல் வெளியானது
Published on: 

‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் ‘வா சிவா’ பாடல் மறைந்த இசையமைப்பாளர் தேவாவின் குரலில் வெளியானது.

பசங்க புரொடக்ஷன்ஸ் மற்றும் தி ரவுடி பிக்சர்ஸ் இணைந்து ‘ஜெயில் மேட்ஸ்’ படத்தை தயாரிக்கின்றன.இப்படத்தில் கே. பி. ஜகன், விஜய் வர்மா, சனாஷ்கா ஸ்ரீ, மோனிகா சந்தோஷ், எம். எஸ். பாஸ்கர், அருள்தாஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கிறார். இப்படத்தின் ஆடியோவை வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் நிறுவனம் வெளியிடுகிறது.திரைப்படத்தை யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

கே. பி. ஜெகன் புதிய கீதை , கோடம்பாக்கம், ராமன் தேடிய சீதை என நான்கு திரைப்படங்களை இயக்கியுள்ளார். என் ஆளோட செருப்பை காணோம், மாயாண்டி குடும்பத்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

‘ஜெயில் மேட்ஸ்’ படத்தின் அறிமுக காணொளி வெளியாகி, மில்லியன் கணக்கிலான டிஜிட்டல் பார்வைகளைப் பெற்று ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

டீசரில் இயக்குநர் கே.பி.ஜெகன் தூத்துக்குடி கிளை சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதில் தொடங்குகிறது. அவருடன் அடைக்கப்பட்டிருக்கும் சக சிறைவாசிகளுக்கு, அவர் ஒரு சினிமா இயக்குநர் என்பதும், பிரபல நடிகர் ஒருவரின் படத்தை இயக்கியவர் அவர் என்பதும் தெரிந்திருக்கிறது. பிரபல நடிகரிடம் பேசி இயக்குநரை விடுதலை செய்ய பரிந்துரைக்கும்படி அவர்கள் ஜெகனை வற்புறுத்துகின்றனர். அதற்கு அந்த நடிகரின் தொடர்பு எண் தன்னிடம் இல்லை என்றும், படிப்புக்காக, மருத்துவ உதவிகளுக்காக அவர்களிடம் பேசலாம். இந்த மாதிரி விஷயங்களுக்காக எல்லாம் அவர்களிடம் பேசக்கூடாது என்கிறார் ஜெகன்.இப்படி ஓர் அசாதாரணமான, சுவாரஸ்யமான கதைக் களத்தைப் பேசி கவனம் ஈர்க்கிறது இந்த டீசர்.

முதல் பாடல் வெளியானது

‘ஜெயில் மேட்ஸ்’ படத்தில் இடம்பெற்றுள்ள‘எங்கெங்கோ தேடிப் போனேன்... ஏதேதோ நாடி போனேன்... இப்போ நான் ஆடிப் போனேனே... என் அப்பன் சிவனே... இப்போ நான் ஆடிப் போனேனே... என் ஐயன் சிவனே...’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான பிரத்யேக வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கின்றன.

X