

சென்னை,
ரஜினிகாந்த் நடித்துள்ள ’ஜெயிலர் 2’ படம் 9 நாட்களில் 628 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் , டைரக்டர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர் 2. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அனிருத் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 15ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் ரிலீஸ் ஆனது.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், யோகி பாபு, எஸ்.ஜே.சூர்யா, ஹிர்திக் ரோஷன், மிதுன் சக்ரவர்த்தி, விஜய் சேதுபதி, நமோ நாராயணா உள்பட பலர் நடித்துள்ளனர். ஜெயிலர் 2 திரைப்படம் கடந்த 15ம் தேதி ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் ஜெயிலர் 2 திரைப்படம் ரிலீஸ் ஆகி நேற்றுடன் 9 நாட்கள் நிறைவடைந்த நிலையில் அப்படம் உலகம் முழுவதும் 628 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. குறிப்பாக இப்படம் இந்தியாவில் மட்டும் 348 கோடி வசூல் செய்துள்ளது. மேலும், நேற்று ஒரேநாளில் இப்படம் இந்தியாவில் 14.50 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.