ஜெயிலர்-2 படப்பிடிப்பு: நடிகர் ரஜினிகாந்தை வரவேற்ற ரசிகர்கள்

ரஜினிகாந்துடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
ஜெயிலர்-2 படப்பிடிப்பு: நடிகர் ரஜினிகாந்தை வரவேற்ற ரசிகர்கள்
Published on

பாலக்காடு,

நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதனையடுத்து ஜெயிலர் திரைப்படத்தின் 2-வது பாகம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த திரைப்படத்திலும் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கிறார். நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். திரைப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

இந்தநிலையில் கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெறும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் காரில் வந்தார். வாளையார் அருகே பழங்குடியின மக்கள் வசிக்கும் நடுப்பதி, உன்னதி பகுதிகளில் ரசிகர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை நோக்கி கையசைத்தார்.

பின்னர் அவருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இதைத்தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது. சண்டை உள்பட பல்வேறு காட்சிகள் எடுக்கப்பட்டது. இதற்காக அங்கு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com