ஜெயிலர் 2 ..மீண்டும் படையப்பாவுடன்! செல்பி பகிர்ந்து ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சி


ஜெயிலர் 2 ..மீண்டும் படையப்பாவுடன்! செல்பி பகிர்ந்து ரம்யா கிருஷ்ணன் நெகிழ்ச்சி
x

'ஜெயிலர் 2' படத்தின் படப்பிடிப்பு பணிகள் கேரளாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னை,

ரஜினிகாந்தி நடிப்பில் நெல்சன் இயகத்தில் 2023ம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. அனிருத் இசையமத்தை இத்திரைப்படம் ரூ. 600 கோடிக்குமேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. 'ஜெயிலர் 2' என பெயரிடப்பட்டு உருவாகிவரும் இத்திடைப்படத்தின் படப்படிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு கோவையில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. அதாவது, கேரளாவில் உள்ள அட்டப்பாடி மலைதொடரில் சுமார் 35 நாட்கள் படப்பிடிப்பு பணிகள் நடைப்பெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், 'ஜெயிலர்' படத்தில் ரஜினிகாந்திற்கும் மனைவியாக நடிக்கும் நடிகை ரம்யா கிருஷ்ணன் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த செல்பி ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதில் படையப்பா திரைப்படம் வெளியாகி 26 வருடங்கள் நிறைவு, ஜெயிலர் 2 படப்பிடிப்பின் முதல் நாள் என பழைய நினைவுகளை நினைவு கூறும் வகையில் அப்பதிவை பதிவிட்டுள்ளார்.

கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் 1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் 'படையப்பா' படம் வெளியாகி ஹிட் அடித்தது. அதில் ரம்யா கிருஷ்ணன் 'நீலம்பரி' என்ற வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜெயிலர் படம் மூலமாக ரஜினியுடன் இணைந்து நடித்து வருகிறார் ரம்யா கிருஷ்ணன்.

1 More update

Next Story