'ஜெயிலர்' படத்தின் வெற்றி - ரஜினிக்கு கார் பரிசு வழங்கிய கலாநிதி மாறன்..!

'ஜெயிலர்' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிக்கு, தயாரிப்பாளர் கலாநிதி மாறன் கார் பரிசு வழங்கியுள்ளார்.
'ஜெயிலர்' படத்தின் வெற்றி - ரஜினிக்கு கார் பரிசு வழங்கிய கலாநிதி மாறன்..!
Published on

சென்னை,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை 'ஜெயிலர்' திரைப்படம் ரூ.525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

இந்த நிலையில், தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்தார். ஜெயிலர் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW i7 மற்றும் BMW X7 மாடல் கார்களை அவரது முன்பு நிறுத்திய கலாநிதி மாறன், அதில் ஒன்றை தேர்ந்தெடுக்குமாறு ரஜினியிடம் கூறினார்.

அதில் BMW X7 மாடல் காரை ரஜினி தேர்ந்தெடுத்தார். அதனை கலாநிதி மாறன், ரஜினிக்கு பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக கலாநிதி மாறன், நடிகர் ரஜினிக்கு காசோலை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com