ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் டிரெய்லர் அப்டேட்

பாபு விஜய் தயாரித்து, இயக்கும் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார்.
ஜெய்யின் ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் டிரெய்லர் அப்டேட்
Published on

சென்னை,

பிரபல இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸிடம் சர்கார் மற்றும் தர்பார் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பாபு விஜய். இவர் தற்போது நடிகர் ஜெய்யை வைத்து ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற புதிய படத்தை இயக்குகிறார். இதில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, கேஜிஎப் புகழ் கருடா ராம், ஶ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குனர் பாபு விஜய் தயாரித்து, இயக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் காதல் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்திலிருந்து “அக்கடி கொழுத்து பக்கடி” என்ற பாடல் வெளியாகி வைரலானது. இந்த பாடலை தேவா பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் செகண்ட் சிங்கிள் சமீபத்தில் வெளியானது.

இந்த நிலையில், ‘சட்டென்று மாறுது வானிலை’ படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை நாளை அறிவிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com