''சூப்பர் மேன்'' படத்தின் அடுத்த பாகத்தில் வில்லன் யார் தெரியுமா? - சூசகமாக சொன்ன ஜேம்ஸ் கன்

மேன் ஆப் டுமாரோ ஸ்கிரிப்ட்டின் படத்தை ஜேம்ஸ் கன் சமீபத்தில் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
James Gunn has all but confirmed the villain of Superman 2, and it's exactly who we all expected
Published on

சென்னை,

டிசி நிறுவனம் தயாரித்த சூப்பர்மேன் படத்தின் மாபெரும்வெற்றிக்குப் பிறகு, ஜேம்ஸ் கன் அதன் அடுத்த பாகத்தை அதிகாரபூர்வமாக அறிவித்தார்

இப்படத்திற்கு ''மேன் ஆப் டுமாரோ'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை 2027 இல் ஜூலை 9 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதன் முதல் பாகம் ( சூப்பர் மேன்) வெளியாகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் கழித்து 2-ம் பாகம் வெளியாக இருக்கிறது.

இதனையடுத்து, இதில் வில்லன் யார் என்பது அதிகமாக எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், புதிய வில்லனை ஜேம்ஸ் கன் சூசமாக கூறி இருக்கிறார்.

மேன் ஆப் டுமாரோ ஸ்கிரிப்ட்டின் படத்தை ஜேம்ஸ் கன் சமீபத்தில் தனது சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார். அதில், மனிதன் போன்ற ஒன்றின் மூளையின் குறுக்கு வெட்டு தோற்றம் காணப்பட்டது.

இது, சூப்பர் வில்லன் பிரைனியாக்கை நினைவுப்படுத்துகிறது. இதனால், பிரைனியாக் இப்படத்தில் வில்லனாக நடிக்க கூடும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com