“ஜன நாயகன்” படத்தில் கேமியோ ரோல் - லோகேஷ் கனகராஜ்

‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.
Lokesh Kanagaraj
Published on

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய்யின் கடைசி திரைப்படம் ‘ஜனநாயகன்’. கடந்த ஜனவரி 9ம் தேதி திரைக்கு வருவதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் அப்படம் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் இயக்குனர்கள் அட்லி, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து புதிய படம் எடுப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய லோகேஷ் கனகராஜ், “விஜய் அண்ணாவும், வினோத் அண்ணாவும் கேமியோ செய்ய அழைத்ததால் ‘ஜன நாயகன்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளேன். இதுகுறித்து விரிவாக சொல்ல முடியாது” என்று தெரிவித்தார். இதன்மூலம் ‘ஜன நாயகன்’ படத்தில் கேமியோ ரோலில் நடித்ததை லோகேஷ் கனகராஜ் உறுதி செய்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com