’ஜனநாயகன்’ லீக் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

தணிக்கை குழுவின் இழுபறியால் தள்ளிப்போயிருந்த 'ஜனநாயகன்' படம் கடந்த 9 அன்று இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது.
’ஜனநாயகன்’ லீக் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு
Published on

சென்னை,

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இணையத்தில் கசிந்த விவகாரம் தொடர்பாக, படத்தயாரிப்பு நிறுவனம் (KVN புரொடக்சன்ஸ்) சார்பில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தணிக்கை குழுவின் இழுபறியால் தள்ளிப்போயிருந்த இப்படம் கடந்த 9 அன்று இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்தது. இது குறித்து நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த விவகாரத்தை மனுவாகத் தாக்கல் செய்தால் அதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

Also Read
சமந்தாவின் ‘மா இன்டி பங்காரம்’ - நாளை வெளியாகும் முதல் பாடல்... பிடிஎஸ் வீடியோ வெளியீடு
’ஜனநாயகன்’ லீக் சர்ச்சை - தயாரிப்பு நிறுவனம் எடுத்த அதிரடி முடிவு

தற்போது, இப்பிரச்சினை தொடர்பாக முறையான மனு தாக்கல் செய்யப்படுநிலையில் நாளை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கி, படத்தை இணையத்தில் கசியவிட்டதாக 6 பேரை கைது செய்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com