’ஜனநாயகன்’ பட சென்சார் - தொடரும் சிக்கல்

ரிவைசிங் கமிட்டி இன்று ’ஜனநாயகன்’ படத்தை பார்ப்பதாக அறிவித்திருந்தது.
’ஜனநாயகன்’ பட சென்சார் - தொடரும் சிக்கல்
Published on

சென்னை,

நடிகர் விஜய்யின் கடைசி படம் என அறிவிக்கப்பட்ட 'ஜனநாயகன்' பொங்கல் பண்டிகைக்கு முன்பாக வெளியாவதாக இருந்தது. அதாவது, கடந்த ஜனவரி 9ஆம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் இந்தப் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாமல், மறுஆய்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

இதையடுத்து, படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்சன்ஸ், சென்சார் சான்றிதழ் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத் தீர்ப்பும் சாதகமாக கிடைக்காததால், 'ஜனநாயகன்' பட வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

Also Read
“திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது நல்லது” - வைரலாகும் பிரபல நடிகையின் கருத்து
’ஜனநாயகன்’ பட சென்சார் - தொடரும் சிக்கல்

இதற்கிடையில், ரிலீஸ் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அறிவித்த படத் தயாரிப்பு நிறுவனம், படத்திற்கு சென்சார் சான்று கோரி ரிவைசிங் கமிட்டியிடம் அனுப்பியது. அதன்படி, “ரிவைசிங் கமிட்டி இன்று படத்தை பார்ப்பதாக அறிவித்திருந்தது. ஆனால் இன்று திடீரென அது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. கமிட்டி உறுப்பினர்களில் சிலருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்சார் சான்றிதழ் வழங்குவதில் சிக்கல் தொடர்கிறது”.

இன்று பிற்பகல் 2 மணிக்கு படம் பார்க்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வருகிற 17-ம் தேதி மறு ஆய்வு செய்யப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com