

சென்னை,
ஜனநாயகன் ரிலீஸ் குறித்து பரவும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எச். வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்சன் நிறுவனம் தயாரித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.