விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்

விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படம் ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
விஜய்யின் “ஜனநாயகன்” படத்தின் தொலைக்காட்சி உரிமையை பெற்ற பிரபல நிறுவனம்
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், ஜனநாயகன் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் தளபதி கச்சேரி, ஒரு பேரே வரலாறு பாடல்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரில் வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.இப்படத்தில் டிரெய்லர் வருகிற 2026 ஜனவரி 1ம் தேதி டிரெய்லர் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது. ஜன நாயகன் படத்தின் வெளிநாட்டு முன்பதிவுகள் தொடங்கிய ஒரே நாளில் 12,700 டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், ஜனநாயகன் திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை பிரபல தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் வாங்கியுள்ளது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் சுமார் 150 கோடியில் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com