மீண்டும் இணையத்தில் வெளியான "ஜனநாயகன்".. ரசிகர்கள் அதிர்ச்சி

படம் வெளியான சில மணி நேரங்களிலேயே 'ஜனநாயகன்' படம் மீண்டும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியாகி உள்ளது.

மீண்டும் இணையத்தில் வெளியான "ஜனநாயகன்".. ரசிகர்கள் அதிர்ச்சி
Published on

சென்னை,

தமிழக முதல்-அமைச்சரும், நடிகருமான விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இப்படம், விஜய்யின் இறுதித் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைகளில் வெளியீடு

பல்வேறு காரணங்களால் தள்ளிப்போன 'ஜனநாயகன்' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மட்டும் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான இந்தப் படம், முதல் நாளிலேயே ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என திரையுலக வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

மீண்டும் இணையத்தில் கசிந்த அன்-எடிட் வெர்சன்

இந்த நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே 'ஜனநாயகன்' திரைப்படத்தின் (UNEDIT) (திருத்தப்படாத) வெர்சன் மீண்டும் சட்டவிரோதமாக இணையத்தில் வெளியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய கசிவு

கடந்த ஏப்ரல் மாதத்திலும் 'ஜனநாயகன்' திரைப்படத்தின் அன்-எடிட் வெர்சன் இணையத்தில் கசிந்ததாக தகவல் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விவகாரம் அடங்கிய நிலையில், படம் திரையரங்குகளில் வெளியான நாளிலேயே மீண்டும் அதேபோன்ற கசிவு ஏற்பட்டதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com