`ஜனநாயகன்'- விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு

எச்.வினோத் இயக்கி வரும் ‘ஜனநாயகன்’ ஜனவரி 9ந் தேதி வெளியாக உள்ளது.
`ஜனநாயகன்'- விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த படக்குழு
Published on

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், கவுதம் மேனன், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அரசியலில் களமிறங்கிய விஜய் நடிக்கும் கடைசி படம் என்று கருதப்படுவதால், 'ஜனநாயகன்' படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் முதல்பாடலான "தளபதி கச்சேரி" பாடல் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக தயாரிப்பு நிறுவனம் அப்பேட் கொடுத்துள்ளது. அந்த அப்டேட் , இன்று மாலை 05.30 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டுள்ளனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com