29வது பிறந்தநாள்... ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் படியில் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.
29வது பிறந்தநாள்... ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகை
Published on

சென்னை,

பாலிவுட் நடிகையும் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3,500 படிகள் நடந்தே சென்று சாமி தரிசனம் செய்தார்.

இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஜான்வி கபூர் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வழிபடுவது குறிப்பிடத்தக்கது.

Also Read
’தி கேரளா ஸ்டோரி 2’ படத்தில் நடிக்காதது ஏன்? - மவுனம் கலைத்த அதா சர்மா
29வது பிறந்தநாள்... ஏழுமலையானை தரிசித்த பிரபல நடிகை

ஜான்வி கபூர் தற்போது ராம் சரணுடன் ’பெத்தி’ படத்தில் நடித்து வருகிறார். புச்சி பாபு சனா இயக்கும் இப்படம் ஏப்ரல் 30-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதில், சிவ ராஜ்குமார், திவ்யேந்து, ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com