ஜான்வி கபூரின் “பெடி” பட கதாபாத்திர போஸ்டர் வெளியீடு

ராம் சரண், ஜான்வி கபூர் நடிக்கும் ‘பெடி’ படம் அடுத்த ஆண்டு மார்ச் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது.
ஜான்வி கபூரின் “பெடி” பட கதாபாத்திர போஸ்டர் வெளியீடு
Published on

கேம் சேஞ்சர் படத்திற்கு பிறகு ராம் சரண் பெடி படத்தில் நடித்து வருகிறார். உப்பெனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான புச்சி பாபு சனா இந்தப் படத்தை இயக்குகிறார். பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் சிவ ராஜ்குமார், மிர்சாபூர் புகழ் திவ்யேந்து மற்றும் ஜகபதி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 27-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகி வருகிறது. 

இந்த நிலையில், பெடி படத்தில் ஜான்வி கபூர், அச்சியம்மா என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக படக்குழு போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com