ஜப்பான் ஒசாகா பட விழா... விஜய், விஜய்சேதுபதி, பா.ரஞ்சித்துக்கு விருது

ஜப்பான் ஒசாகா பட விழா... விஜய், விஜய்சேதுபதி, பா.ரஞ்சித்துக்கு விருது
Published on

ஜப்பானில் தமிழ் படங்களை அங்கீகரிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டு வருகிறது. இதில் சிறந்த தமிழ் நடிகர்-நடிகைகள், திரைப்படங்களை தேர்வு செய்து விருது வழங்குகிறார்கள்.

2021-ல் வெளியான தமிழ் திரைப்படங்களுக்கு தற்போது விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. சிறந்த நடிகர் விருது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்க்கும் சிறந்த நடிகை விருது தலைவி படத்தில் நடித்த கங்கனா ரணாவத்துக்கும் வழங்கப்படுகிறது.

இதுபோல் சிறந்த டைரக்டர் விருது சார்பட்டா பரம்பரை படத்தை எடுத்த பா.ரஞ்சித்துக்கும் சிறந்த இசையமைப்பாளர் விருது யுவன் சங்கர் ராஜாவுக்கும் வழங்கப்படுகிறது. சிறந்த திரைப்படமாக சார்பட்டா பரம்பரை தேர்வாகி உள்ளது. சிறந்த திரைக்கதை விருதை மாநாடு படத்துக்காக வெங்கட்பிரபு பெறுகிறார்.

சிறந்த வில்லன் விருது மாஸ்டர் படத்தில் நடித்த விஜய்சேதுபதிக்கு வழங்கப்படுகிறது. சிறந்த துணை நடிகர், நடிகை விருது ஜெய்பீம் படத்தில் நடித்த மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் பெறுகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com