ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழா: நடிகர் விஜய்க்கு சிறந்த நடிகர் விருது...எந்த படத்திற்கு தெரியுமா...!

ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் நடிகர் விஜய்-க்கு சிறந்த நடிகருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Image Courtesy: Instagram - actorvijayoffi 
Image Courtesy: Instagram - actorvijayoffi 
Published on

டோக்யோ,

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் வரும் அக்டோபட் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இந்திய அளவில் பிரபலமான சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்தப்படத்தை அடுத்து நடிகர் விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்-க்கு மாஸ்டர் படத்துக்காக வழங்கப்படவுள்ளது. மேலும் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குநர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் வழங்கப்பட உள்ளது.

மேலும், சிறந்த இசையமைப்பாளர் விருது மாநாடு படத்துக்காக யுவன் ஷங்கர் ராஜாவுக்கும், சிறந்த துணை நடிகர் விருது ஜெய் பீம் படத்துக்காக மணிகண்டனுக்கும், சிறந்த திரைக்கதை விருது மாநாடு படத்துக்காக இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும் வழங்கப்படவிருக்கிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com