''தனா பிசாச்சி''...வைரலாகும் 'லிங்கா' நடிகையின் தெலுங்கு அறிமுக பட பாடல்

இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாகிறது.
jatadhara movie dhana pisaachi lyrical song out now
Published on

சென்னை,

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் சோனாக்சி சின்ஹா. கடந்த 2010-ம் ஆண்டு வெளியான 'தபாங்' படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமான இவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தற்போது சோனாக்சி சின்ஹா தெலுங்கிலும் அறிமுகமாக இருக்கிறார். வெங்கட் கல்யாண் இயக்கி வரும் படம் 'ஜடதாரா'. இப்படத்தில் சுதீர் பாபு கதாநாயகனாக நடிக்க பாலிவுட் நடிகை சோனாக்சி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது சோனாக்சி சின்ஹாவின் முதல் தெலுங்கு படம் என்பதால் இப்படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலானநிலையில், தற்போது இப்படத்தின் ''தனா பிசாச்சி'' என்ற பாடல் வெளியாகி இருக்கிறது.

இப்படம் தெலுங்கு மற்றும் இந்தியில் நவம்பர் மாதம் 7-ம் தேதி வெளியாகிறது. விரைவில் டிரெய்லர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com