வில்லனாக ஜெய்

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லன் வேடம் ஏற்றார். கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.
வில்லனாக ஜெய்
Published on

கதாநாயகர்கள் வில்லன்களாக நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர். விக்ரம் வேதா, மாஸ்டர் படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக வந்தார். என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய் வில்லன் வேடம் ஏற்றார். கார்த்திக், அர்ஜுன் ஆகியோரும் வில்லன்களாக நடித்துள்ளனர்.

தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்க மாதவனை அணுகி உள்ளனர். இந்த நிலையில் ஜெய்க்கும் வில்லன் வாய்ப்பு வந்துள்ளது. சென்னை 28 படத்தில் பிரபலமான ஜெய் தொடர்ந்து சுப்பிரமணியபுரம், வாமனன், கோவா, அவள் பெயர் தமிழரசி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, பிரியாணி, பிரம்மன், வடகறி, பலூன் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் 3 படங்கள் கைவசம் உள்ளன.

இந்த நிலையில் இயக்குனர் அட்லி தயாரிக்கும் புதிய படத்தில் வில்லனாக நடிக்க ஜெய்யிடம் பேசி வருகிறார்கள். இந்த படத்தை அட்லியின் உதவியாளர் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com