ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் ஒரு படம்

ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்து உள்ளார்.
ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றி மேலும் ஒரு படம்
Published on

மறைந்த முதல்அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை படமாக தயாரிக்கப்பட உள்ளது என்றும், இந்த படத்தை பிரபல டைரக்டர் விஜய் இயக்குவார் என்றும் அறிவிப்பு வந்துள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ந் தேதி இதன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும், அன்றைய தினமே படத்தின் முதல் தோற்றம் வெளியாகும் என்றும் தெரிவித்து உள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்த படம் தயாராகிறது. ஜெயலலிதா வேடத்துக்கு நடிகை தேர்வு நடக்கிறது. நயன்தாரா, வித்யாபாலன், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஆகியோரை பரிசீலிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கப்போவதாக பெண் இயக்குனரான பிரியதர்ஷினியும் அறிவித்து உள்ளார். இவர் டைரக்டர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். தற்போது வரலட்சுமி நடிக்கும் சக்தி என்ற படத்தை இயக்கி வருகிறார். அவர் கூறியதாவது:

ஜெயலலிதா ஓர் இரும்பு பெண்மணி. அவரது வாழ்க்கை பெண்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்க வேண்டும் என்று முடிவு எடுத்து 4 மாதங்களுக்கு முன்பிருந்தே திரைக்கதையை உருவாக்கி வருகிறேன். நடிகர் தேர்வும் நடக்கிறது. ஜெயலலிதா கதாபாத்திரத்தில் முன்னணி கதாநாயகி நடிக்கிறார்.

பட அறிவிப்பை வெளியிட தயாரான நிலையில் விஜய்யும் ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஜெயலலிதா வரலாறை யார் வேண்டுமானாலும் படமாக எடுக்கலாம். ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்குவதில் இருந்து நான் பின்வாங்க மாட்டேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com