ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா? நடிகர் ஆனந்த்ராஜ் சந்தேகம்

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் உள்ளது என நடிகர் ஆனந்த்ராஜ் கூறினார். #Jayalalitha #JayaFails #jayaverdict #amma #ActorAnandRaj #JayalalithaaVideo
ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா? நடிகர் ஆனந்த்ராஜ் சந்தேகம்
Published on

நடிகர் ஆனந்த ராஜ் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டிடிவி ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளதா எனும் சந்தேகம் உள்ளது. ஜெ மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சசிகலாவிடம் ஆணையம் விளக்கம் கேட்டதற்கு பாராட்டுக்கள்.

ஜெயலலிதா இருந்த வீடியோவில் தெரியும் மரம் போயஸ் கார்டனிலும் உள்ளது . எனக்கு தெரிந்தவரை ஜெயலலிதாவை மருத்துவமனையில் எந்த அமைச்சரும் பார்க்கவில்லை . வீடியோ விவகாரம் தொடர்பாக, ஆறுமுகசாமி ஆணையம் உண்மையை வெளி கொண்டுவர வேண்டும். ஆர்.கே.நகரில் தினகரன் மாயாஜாலம் செய்து வெற்றி பெற்று விட்டார் .

டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அதிமுகவினர் இருந்தால் வெட்கப்பட வேண்டும் . ஒரு குடும்பத்திற்காக அதிமுக தொடங்கப்படவில்லை; சாமானியர்களுக்காகவே தொடங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com