ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவு

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கில் இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: பேச்சுவார்த்தை நடத்த கோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியப்போவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து 2009-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட தங்களது திருமண பதிவை ரத்து செய்து மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து வழங்கக்கோரி ஜெயம் ரவி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில் விவாகரத்து கோரி ஜெயம் ரவி தொடர்ந்த மனு மீதான விசாரணை சென்னை குடும்ப நல கோர்ட்டில் இன்று நடைபெற்றது. விசாரணைக்கு ஜெயம் ரவி நேரில் ஆஜரானார். ஆர்த்தி காணொலி காட்சி வாயிலாக ஆஜரானார்.

வழக்கை விசாரித்த சென்னை குடும்ப நல கோர்ட்டு, நடிகர் ஜெயம் ரவி மற்றும் அவரது மனைவி இருவரும் சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டுள்ளது. இன்றே இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்த நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com