ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு..!

ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' திரைப்படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஜெயம் ரவி நடிக்கும் 'இறைவன்' படத்தின் புதிய பாடலின் புரோமோ வீடியோ வெளியீடு..!
Published on

சென்னை,

'வாமனன்', 'என்னென்றும் புன்னகை', 'மனிதன்' உள்ளிட்ட படங்களை இயக்கியவர் அஹமத். இவர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறைவன்'. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ஹரி.கே.வேதாந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜே.வி.மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பு செய்கிறார். சைக்கோ திரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடலின் புரோமோ வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 'ஷேட்ஸ் ஆப் லவ்' (Shades of Love) என்ற இந்த பாடலின் லிரிக் வீடியோ இன்று மாலை 5.05 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ள இந்த பாடலை யுவன் ஷங்கர் ராஜா, அர்மான் மாலிக், ஷிவானி பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். 'இறைவன்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com