ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு

'சைரன்' திரைப்படம் பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகவுள்ளது.
ஜெயம் ரவி நடித்துள்ள 'சைரன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
Published on

சென்னை,

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில் ஜெயம் ரவி நடித்துள்ள திரைப்படம் 'சைரன்'. குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் திரில்லராக பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், யோகிபாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றது.

இந்த நிலையில், 'சைரன்' படத்தின் மூன்றாவது பாடலான 'அடி ஆத்தி' பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. முருகன் மந்திரம் எழுதியுள்ள இந்த பாடலை அந்தோணி தாசன், சிந்துரி விஷால், முகேஷ் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

X

Daily Thanthi
www.dailythanthi.com