ஜெயம் ரவி 'பிரதர்' படத்தில் பட்டாசு மாதிரி வெடிச்சிருக்காரு - நட்டி நட்ராஜ்

‘பிரதர்’ படம் நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகி உள்ளது என்று நட்டி நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி 'பிரதர்' படத்தில் பட்டாசு மாதிரி வெடிச்சிருக்காரு - நட்டி நட்ராஜ்
Published on

சென்னை,

நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குனர் எம். ராஜேஷ் இயக்கத்தில் 'பிரதர்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ், சீதா, நட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்கிரீன் சீன் மீடியா தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

அக்கா - தம்பி உறவை அடிப்படையாக கொண்டு குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி வைரலானது. 'பிரதர்' படத்துக்கு தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படம் வருகிற 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின்'மக்காமிஷி' பாடல் வெளியாகி வைரலானது. இதற்கிடையில் படக்குழுவினர் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதன்படி, துபாய் பல இடங்களில் புரமோஷன் பணியில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.

தற்போது இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நட்டி நட்ராஜ் ஜெயம் ரவி குறித்தும் பிரதர் படம் குறித்தும் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது, "பிரதர் படத்தின் கதையை சொல்லும் போதே எனக்கு ரொம்ப பிடித்தது. குடும்ப கதையில் இந்த படத்தை ராஜேஷ் சார் அழகாக சொல்லி இருக்கிறார். ஜெயம் ரவி இந்த படத்தில் பட்டாசு மாதிரி வெடிச்சிருக்காரு. சந்தோஷ் சுப்பிரமணியம் கேரக்டருக்கும் கார்த்திக் கேரக்டருக்கும் வித்தியாசம் இருக்கு. அவ்ளோ அழகா நடிச்சிருக்காரு. பூமிகா மேடம் அருமையாக நடிச்சிருக்காங்க. இந்த படம் நல்ல ஒரு பீல் குட் படமாக உருவாகி இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com