ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 34' படத்தின் படப்பிடிப்பு எப்போது?

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 34' படத்தின் படப்பிடிப்பு வரும் 16ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜெயம் ரவி நடிக்கும் 'ஜெ.ஆர் 34' படத்தின் படப்பிடிப்பு எப்போது?
Published on

சென்னை,

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 'ஜெயம்' படத்தின் மூலம் அறிமுகமான இவர் ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடித்த 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து, வெளியான 'இறைவன், சைரன்' படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. இவர் தற்பொழுது ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஜெயம் ரவியின் 34-வது (ஜெ.ஆர் 34) படம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி, இப்படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் 'டாடா' பட இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் பிரதீப் ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பிரபல இயக்குனர் ரத்னகுமார் இந்த படத்தில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்ற உள்ளார் என்றும் அப்டேட் வெளி வந்துள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் 16ம் தேதி சென்னையில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் வடசென்னையை மையமாக வைத்து உருவாக உள்ளது. இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். ஜெயம் ரவிக்கு ஜோடியாக தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவாலின் மகள் நடிக்கிறார்.

ஸ்க்ரீன் ஸீன் நிறுவனம் ஜெயம் ரவியுடன் இணையும் 3-வது படம் 'ஜெ.ஆர் 34' என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com