ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியீடு..!

‘இறைவன்’ திரைப்படம் நாளை ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஜெயம் ரவியின் 'இறைவன்' திரைப்படம் நாளை ஓ.டி.டி.யில் வெளியீடு..!
Published on

சென்னை,

இயக்குனர் அகமத் இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்த 'இறைவன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 28-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. ராகுல் போஸ், ஆஷிஷ் வித்யார்த்தி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

சைக்கோ திரில்லர் கதையாக உருவாகி இருந்த 'இறைவன்' திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தைப் பெற்றது. இந்நிலையில் 'இறைவன்' படத்தின் ஓ.டி.டி. ரீலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 26-ந்தேதி(நாளை) 'இறைவன்' திரைப்படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Netflix India South (@Netflix_INSouth) October 24, 2023 ">Also Read:

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com