ஜெயராம் - சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கவுதம் ராஜ் இயக்கத்தில் சிம்ரன், ஜெயராம் நடிக்கும் புதிய பட பூஜை சமீபத்தில் நடைபெற்றது.
ஜெயராம் - சிம்ரன் நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்
Published on: 

ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

“ராட்சசி” பட இயக்குநரின் புதிய படம்

ராட்சசி, கழுவேத்தி மூர்க்கன் படங்களை இயக்கியவர் கவுதம் ராஜ். இவரின் அடுத்த படப்பூஜை சென்னையில் கடந்த ஆகஸ்ட் 23ம் தேதி நடைபெற்றது.

வொயிட் கார்பெட் பிலிம்ஸ் மற்றும் ரிடெக்டட் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. ஆர்யா வழங்கும் இந்த படத்தில் ஜெயராம், சிம்ரன் நடிக்கிறார்கள். ‘பஞ்சதந்திரம்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்து இருந்தாலும், அதில் கமல் ஜோடியாக சிம்ரன் வருவார். இந்த படத்தில் ஜெயராம் ஜோடியாக முதன்முறையாக நடிக்கிறார்.

ஜெயராம் ஜோடியாக சிம்ரன்

படம் குறித்து ஜெயராம் பேசுகையில், “ஒரு சந்தோஷமான நேரம் இது. நடிகை சிம்ரன் உடன் பஞ்சதந்திரம் படத்தில் நடித்தேன். அதன் பின் அவருடன் ஜோடியாக தற்போது நடிக்கிறேன். மகிழ்சியாக உள்ளது” என்றார். இறுதியாக, இவர் நடித்த ‘பரிமளா அண்ட் கோ’ படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கவுதம் ராஜ் இயக்கிய ‘ராட்சசி’ கல்வி பற்றிய சமூக அக்கறை கதையாக இருந்தது. ‘கழுவேத்தி மூர்க்கன்’ கிராமபுற பின்னணியில் ஒரு சீரியஸ் கதையாக இருந்தது. ஆனால், இந்த படம் காதல் கலந்த காமெடியாக இருக்கும் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். இந்த படத்தை ஆர்யாவின் பட நிறுவனமும் இணைந்து தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

இந்த நிலையில், ஜெயராம், சிம்ரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com