சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடிப்போன நடிகை

ஷாலினி பாண்டே ரன்வீர் சிங்கின் ஜெயேஷ்பாய் ஜோர்தார் படம் மூலம் பாலிவுட்டுக்கு சென்றிருக்கிறார்.
சினிமாவில் நடிப்பதற்காக வீட்டை விட்டு ஓடிப்போன நடிகை
Published on

2017-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா வுடன் சேர்ந்து முத்தக்காட்சியில் அவர் நடித்தது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு சில இந்தி படங் களிலும், தமிழில் 100% காதல்', கொரில்லா', சைலன்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார்.

ரன்வீர் சிங் ஜோடியாக ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற இந்தி படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஷாலினி பாண்டே மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார்.

அவர் பேசும்போது, நான் என்ஜினீயரிங் படிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். நானும் அவருக்காக படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் ஆசை. இதற்காக எனது அப்பாவை மனம் இரங்கச் செய்ய 4 வருடங்களாக முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். மனதுக்கு கஷ்டம்தான். ஆனால் இப்போது பெற்றோர்கள் என்னை பெருமையாக நினைப்பார்கள் என்று நினைக்கிறேன் என்று உருக்கமாக குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com