கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த ஜெய்யின் 'தீராக் காதல்' படக்குழு

ஜெய் நடித்துள்ள 'தீராக் காதல்' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்த ஜெய்யின் 'தீராக் காதல்' படக்குழு
Published on

சென்னை,

இயக்குனர் ரோகின் இயக்கத்தில் ஜெய் நடிக்கும் திரைப்படம் 'தீராக் காதல்'. இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதி செய்கிறார். பிரசன்னா ஜி.கே. படத்தொகுப்பு மேற்கொள்கிறார்.

இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இந்த நிலையில், 'தீராக் காதல்' படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, ஐஸ்வர்யா ராஜேஷ், 'ஆரண்யா' என்ற கதாபாத்திரத்திலும் ஜெய், 'கவுதம்' என்ற கதாபாத்திரத்திலும் ஷிவதா, 'வந்தனா' என்ற கதாபாத்திரத்திலும் விருத்தி விஷால், 'ஆர்த்தி' என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை படக்குழு போஸ்டர்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தீராக் காதல்' திரைப்படம் மே 26-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com