''லோகா''வின் வெற்றி...'அந்த பாதையில் செல்லாதீர்கள்' - ''திரிஷ்யம்'' பட இயக்குனர் எச்சரிக்கை


Jeethu Joseph cautions filmmakers on superhero trend post-Lokah’s success
x

ஜீத்து ஜோசப் சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் லோகா: சாப்டர் 1 - படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசினார்.

சென்னை,

''திரிஷ்யம்'' படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் சமீபத்தில் கல்யாணி பிரியதர்ஷனின் லோகா: சாப்டர் 1 - படத்தின் வெற்றியைப் பற்றிப் பேசினார்.

தனது மிராஜ் திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளநிலையில், அப்படத்திற்கான புரமோஷன் நிகழ்வில் பேசிய அவர், 'லோகா'வின் வெற்றிக்குப் பிறகு எல்லோரும் அதே பாதையில் செல்ல வேண்டாம் என்று எச்சரித்தார்.

அவர் கூறுகையில், ''ஒரு துறையில் வெவ்வேறு வகைகளைச் சேர்ந்த திரைப்படங்கள் இருக்க வேண்டும். ஆனால், என்ன நடக்கிறது என்றால், ஒரு வகையைச் சேர்ந்த படம் சூப்பர்ஹிட்டானால், எல்லோரும் அதையே செய்ய விரும்புகிறார்கள்.

லோகாவின் வெற்றிக்கு பிறகு, இப்போது எல்லோரும் சூப்பர் ஹீரோ படங்களைச் செய்யத் தொடங்கும் நிலை உள்ளது. அது சரியான செயல் அல்ல'' என்றார்.

ஜீத்து ஜோசப் தற்போது 'மிராஜ்' படத்தை இயக்கி இருக்கிறார். இப்படத்தில் ஆசிப் அலி, அபர்ணா பாலமுரளி நடித்துள்ளனர். நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. இப்படம் வருகிற 19-ம் தேதி திரைக்கு வருகிறது.


1 More update

Next Story