ஜீவாவின் 45வது படப்பிடிப்பு பூஜை அப்டேட்

நடிகர் ஜீவாவின் 45வது படத்தை நிதிஷ் சகாதேவ் இயக்குகிறார்.
ஜீவாவின் 45வது படப்பிடிப்பு பூஜை அப்டேட்
Published on

சென்னை,

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2 போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். கடைசியாக இவர் பிளாக் படத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தையடுத்து ஜீவா, பா.விஜய் இயக்கத்தில் 'அகத்தியா' படம் கலவையான விமர்சங்களை பெற்றது.

இந்நிலையில் நடிகர் ஜீவா நடிக்கும் 45-வது படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பேலிமி படத்தின் இயக்குநர் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் இப்படம் உருவாகிறது. படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது. ஜீவாவுடன் தம்பி ராமையா, பிரார்தனா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். குடும்பப் பின்னணி கதையாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

View this post on Instagram

X

Daily Thanthi
www.dailythanthi.com