ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு

எம் ராஜேஷ் இயக்கும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தில் ஜீவா, இவானா நடித்துள்ளனர்.
ஜீவாவின் “ஜாலியா இருந்த ஒருத்தன்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு
Published on

‘ஆசை ஆசையாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ‘சிவா மனசுல சக்தி, கற்றது தமிழ், கொரில்லா, ரவுத்திரம், கலகலப்பு 2’ போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார். ‘பிளாக்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தையடுத்து ஜீவா, பேலிமி படத்தின் நிதிஷ் சகாதேவ் இயக்கத்தில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜீவா தன் 47-வது படத்தில் இயக்குநர் ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கிறார். ராஜேஷ் இயக்கிய சிவா மனசுல சக்தி திரைப்படம் ஜீவாவுக்குப் பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஜீவா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். தற்போது, 16 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஜீவா - ராஜேஷ் கூட்டணி இணைந்துள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்டோரும் கேமியோவாக தோன்றியுள்ளனர்.

கலகலப்பான புரோமோ வீடியோ மூலம் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் டைட்டிலை படக்குழு சமீபத்தில் அறிவித்தது. புரோமோவில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் ஜீவாவும், ராஜேஷும் பேசும் வசனங்கள் சிரிக்க வைப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com