ஜீவாவின் “தகப்பன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்

ஜீவாவின் ‘தகப்பன்’ படத்தை ‘கிடா’ பட இயக்குநர் ரா.வெங்கட் இயக்கவுள்ளார்.
ஜீவாவின் “தகப்பன்” படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம்
Published on

நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திற்குத் ‘தகப்பன்’ என பெயரிடப்பட்டுள்ளது.

'ஆசை ஆசையாய்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் 'சிவா மனசுல சக்தி', 'கற்றது தமிழ்', 'கோ', 'ரவுத்திரம்', 'கலகலப்பு 2' போன்ற பல்வேறு படங்களில் நடித்து தனக்கென ரசிகர்களை உருவாக்கி வைத்துள்ளார்.

கடந்த பொங்கலுக்கு வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பிய ஜீவாவுக்கு அடுத்தடுத்து படம் வரத் தொடங்கியுள்ளது. ‘பிளாக்’ பட இயக்குநரின் படம் மற்றும் ராஜேஷ் எம் இயக்கத்தில் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என இரண்டு படங்களை கைவசம் வைத்துள்ளார்.

ஜீவாவின் புதுப்படத்தை ‘கிடா’ பட இயக்குநர் ரா.வெங்கட் இயக்கவுள்ளார். ‘கிடா’ படம் வசூல் ரீதியாக பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியக நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை கருடன் மற்றும் மாமன் படத்தை தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படம் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடைபெற உள்ளது

இந்த நிலையில், ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு மதுரையில் தொடங்கியுள்ளது. மேலூரில் உள்ள கருப்பசாமி கோவிலில் படப்பிடிப்பு பூஜை நடைபெற்றது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com