ஜீவா நடிக்கும் “தகப்பன்” திரைப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியீடு

ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
ஜீவா நடிக்கும் “தகப்பன்” திரைப்படத்தின் முதல் பாடல்  நாளை வெளியீடு
Published on: 

ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகிறது.

‘கிடா’ படத்தின் இயக்குநர் ரா. வெங்கட் இயக்கத்தில் ஜீவா, ரஜிஷா விஜயன் இணைந்து நடித்துள்ள படம் ‘தகப்பன்’. மாமன், கருடன் ஆகிய வெற்றிப்படங்களைத் தயாரித்த லார்க் ஸ்டூடியோஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது.

மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை பின்னணியாகக் கொண்டு, அப்பா -மகன் உறவு, குடும்ப பாசம் மற்றும் மனித உணர்வுகளை மையமாக வைத்து உருவாகும் ஆழமான குடும்பக் கதையாக ‘தகப்பன்’ படம் உருவாகியுள்ளது.

படப்பிடிப்பு தொடங்கிய மதுரை மேலூர் பகுதியில் உள்ள மேலவளவு கருப்பு கோயிலிலேயே படத்தின் இறுதிக்கட்ட இரவு நேரப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. இந்தப் படத்துக்கு மார்ஷல் ராபின்சன் இசையமைத்துள்ளார்.

40 நாள்களில் படப்பிடிப்பு நிறைவு

நடிகர் ஜீவா நடித்துள்ள ‘தகப்பன்’ படத்தின் படப்பிடிப்பு 40 நாள்களில் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 24 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

முதல் பாடல் நாளை வெளியீடு

இந்நிலையில், ஜீவா நடிக்கும் ‘தகப்பன்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘தங்கப்புள்ள’ பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

X