'ஜோ' நடிகையின் முதல் தெலுங்கு படம்


Joe actress to make Telugu debut
x
தினத்தந்தி 25 March 2025 7:03 AM IST (Updated: 25 March 2025 8:53 AM IST)
t-max-icont-min-icon

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'ஜோ' படத்தில் நடித்து பிரபலமானவர் மாளவிகா மனோஜ்.

ஐதராபாத்,

பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ். இவர் தற்போது "ஓ பாமா அய்யோ ராமா" என்ற படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர் ராம் கோதலா இயக்கும் இப்படத்தில் மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடிக்கிறார். இவர் தமிழில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான 'ஜோ' படத்தில் நடித்து பிரபலமானவர்.

"ஓ பாமா அய்யோ ராமா" படத்தின் மூலம் மாளவிகா தெலுங்கில் அறிமுகமாகிறார். வி ஆர்ட்ஸ் பேனரில் ஹரிஷ் நல்லா தயாரித்துள்ள இப்படத்தை ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா விநியோகம் செய்கிறது.

இப்படம் இந்தாண்டு கோடையில் வெளியாக உள்ளநிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது.

1 More update

Next Story