படப்படிப்பு தளத்தில் டைரக்டருடன் சண்டையிட்ட ஜானி டெப்

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் படப்பிடிப்பு தளத்தில் டைரக்டர் மைவென்னுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.
படப்படிப்பு தளத்தில் டைரக்டருடன் சண்டையிட்ட ஜானி டெப்
Published on

லண்டன்

நடிகர் ஜானி டெப்,டைரக்டர மேவெனுடன் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் ரெஞ்ச் திரைப்படமான ஜீன் டு பாரியில் நடித்து வருகிறார். இதனை இயக்குனர் டைரகட்ர் மைவென் இயக்கி வருகிறார்.இப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் நிலையில் உள்ளது.முன்னாள் மனைவி ஆம்பர் ஹியர்டுடன் அவதூறு வழக்கில் நடிகர் வெற்றி பெற்ற பிறகு ஜீன் டு பாரி அவரது முதல் படம்.

மைவென் இயக்கிய இப்படத்தில் ஜானி கிங் லூயிஸ் 15 ஆக நடிக்கிறார்.இப்படம் 2023ல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரெஞ்சு ஷோபிஸ் வர்ணனையாளர் பெர்னார்ட் மான்டீல்ட்,நேரம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக மைவெனுடன் ஜானி டெப் வாய்மொழியாக சண்டையிட்டதாகக் கூறினார்.

நேரப் பிரச்சனைகள் காரணமாக நடிகர் ஜானி டெப் தன்னுடன் சண்டையிட்டது குறித்து விவரித்தார் பெர்னார்ட் மான்டீல்ட்  கூறியதாவது;-

"ஜானி டெப் செட்டில் வரும்போது ஒரு சிறந்த நடிகர்... சில சமயங்களில் காலை 6 மணிக்கு டீம் தயாராக இருக்கும், யாரும் வந்திருக்கமாட்டார்கள்.இதனால் மைவென் கோபமடைந்தார்.அடுத்த நாள், அவர் வரவில்லை, ஜானி டெப் வந்து இருக்கிறார்," "இது பைத்தியக்காரத்தனம் என்று அவர் டைரக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com