'சூர்யா 44' படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்? - வெளியான தகவல்

'சூர்யா 44' படத்தில் இணையும் தனுஷ் பட நடிகர்? - வெளியான தகவல்

'சூர்யா 44' படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது.
Published on

சென்னை,

நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'கங்குவா'. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அடுத்ததாக சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 44 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தினை சூர்யாவும், கார்த்திக் சுப்புராஜும் இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் ரிலீஸுக்கு பின்னர் வரும் லாபத்தில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் இருவருக்கும் பங்கு இருப்பதனால் சம்பளமே வாங்காமல் சூர்யா நடிக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா மட்டும் இல்லாமல் கார்த்திக் சுப்புராஜும் சம்பளம் வாங்கவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 17-ம் தேதி துவங்கவுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் நடிக்க உள்ளதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்தில் நடிகர் ஜோஜு ஜார்ஜ் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இவர் முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளிவந்த 'ஜகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார்.

X

Dailythanthi
www.dailythanthi.com