என் மகள் நடனத்திற்கு பின்னால் அந்த நடிகர் இருக்கிறார்...சுவாரசிய உண்மையை பகிர்ந்த ஸ்ரீலீலாவின் தாய்

ஸ்ரீலீலா ஒரு நடனக் கலைஞராக மாறியதற்கு ஜூனியர் என்.டி.ஆர்தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
சென்னை,
டோலிவுட்டின் சிறந்த நடிகராக மட்டுமில்லாமல் நடனக் கலைஞர்களில் ஒருவராகவும் இருப்பவர் ஜூனியர் என்.டி.ஆர். இதுவரை, அவரது மாஸ் நடனத்தையும் வேகமான நடனத்தையும் மட்டுமே அனைவரும் பார்த்திருக்கிறார்கள்.
ஆனால், அவர் ஒரு குச்சிப்புடி நடனக் கலைஞர். அவர் சிறுவயதில் பல மேடைகளில் நடனமாடி பல விருதுகளைப் பெற்றார். அதுமட்டுமின்றி, பல நடனக் கலைஞர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக இருந்துள்ளார். தற்போது டோலிவுட்டில் நட்சத்திர கதாநாயகியாக இருக்கும் ஸ்ரீலீலா ஒரு நடனக் கலைஞராக மாறியதற்கும் ஜூனியர் என்.டி.ஆர்தான் காரணம் என்பது உங்களுக்குத் தெரியுமா?
ஸ்ரீலீலாவின் தாய் ஸ்வர்ணலதா அதை பற்றிய பல சுவாரஸ்யமான விஷயங்களைச் சொன்னார். அவர் கூறுகையில், ''1997-ல் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு விழாவில் ஜூனியர் என்.டி.ஆர் நடனமாடினார். நான் அங்கு சென்றிருந்தேன். பின்னர், அவரிடம் பேசினேன். எனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவளை உன்னைப் போலவே நிச்சயமாக நடனமாட வைப்பேன் என்று சொன்னேன். திட்டமிட்டபடி என் மகளை நடனக் கலைஞராக்கினேன்'' என்றார்.
'கிஸ்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான ஸ்ரீலீலா, அதன் பிறகு தமகா, குண்டூர்காரம், ஸ்கந்தா, பகவந்த் கேசரி, எக்ஸ்ட்ராடினரி மேன், ஆதிகேசவா போன்ற படங்களில் தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்தார்.
தற்போது ரவி தேஜாவுடன் 'மாஸ் ஜதாரா' படத்தில் நடித்துள்ளார். பவன் கல்யாணுடன் 'உஸ்தாத் பகத் சிங்' படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் ''பராசக்தி'' படத்தின் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இந்தியிலும் அவருக்கு வாய்ப்புகள் அதிகரித்து வருகின்றன.






