"காந்தாரா 3" படத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்?

'காந்தாரா' படத்தின் 3-ம் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"காந்தாரா 3" படத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்?
Published on

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நாயகனாக நடித்து, இயக்கிய படம் 'காந்தாரா'. கிஷோர், சப்தமி கவுடா உட்பட பலர் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் தயாரித்த இந்தப் படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் தயாராகிரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. காந்தாரா திரைப்படத்தில் ரிஷப் 3 விதமான தோற்றங்களில் நடித்திருந்தார். இதில் அவர் ஏற்று நடித்த பஞ்சுருளி தெய்வ கதாபாத்திரம், மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

அந்த வெற்றியை தொடர்ந்து காந்தாரா' திரைப்படத்தின் 2-ம் பாகம் உருவாகி வருகிறது. காந்தாரா படத்தின் முதல் பாகம் என்று அறிவித்த படக்குழு, அதற்கு காந்தாரா: சாப்டர் 1 என்று டைட்டில் வைத்துள்ளது. இதில் நாயகியாக ருக்மணி வசந்த் நடித்துள்ளார். இப்படத்தை ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தில் ரிஷப் ஷெட்டியுடன் ஜெயராம் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் இசையை அஜேஷ் லோக்நாத் மேற்கொள்கிறார். திரைப்படம் வரும் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. சமீபத்தில் 'காந்தாரா 2' திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து 'காந்தாரா' 3-ம் பாகம் உருவாக்கும் திட்டமும் வைத்திருக்கிறார். அதில், 'காந்தாரா' படத்துக்குப் பின் என்ன நடந்தது என்று சொல்ல திட்டமிட்டு இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஜூனியர் என்.டி.ஆரிடம் பேசியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவலை ஜூனியர் என்.டி.ஆர் தரப்பும் மறுக்கவில்லை. இதனால் இந்த தகவல் உண்மையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆர் தனது குடும்பத்தினருடன் கர்நாடகாவுக்கு சென்றிருந்த போது, ரிஷப் ஷெட்டிதான் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com