பிரசாந்த் நீல் இயக்கத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்


பிரசாந்த் நீல் இயக்கத்தில் இணையும் ஜூனியர் என்.டி.ஆர்
x

'கே.ஜி.எப்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளார்.

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது.

இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் 'வார் 2' படத்தில் நடித்து வருகிறார். அதனை தொடர்ந்து 'கே.ஜி.எப்' படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக 'என்டிஆர் 31' என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தினை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமும் நந்தமுரி தரகா ராமாராவ் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்க உள்ளன. இதில் பிரபல கன்னட நடிகை ருக்மினி வசந்த் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், பிரமாண்டமான பட்ஜெட்டில் உருவாக உள்ள இப்படத்தின் அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது, நாளையில் இருந்து நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் இந்த புதிய படத்திற்கான படப்பிடிப்பு பணியில் இணைய உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

1 More update

Next Story