"மேட் இன் இந்தியா" வெப் தொடரில் ஜூனியர் என்டிஆர்?

‘மேட் இன் இந்தியா’ வெப் தொடரில் தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"மேட் இன் இந்தியா" வெப் தொடரில் ஜூனியர் என்டிஆர்?
Published on

சென்னை,

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக தேவரா படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, பாலிவுட்டில் வார் 2 படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜூனியர் என்.டி.ஆர், பிரசாந்த் நீல் இயக்கத்தில் 'என்டிஆர்31' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இயக்குநர் ராஜமவுலி மகன் கார்த்திகேயா தயாரிப்பில் 'மேட் இன் இந்தியா' வெப் தொடர் உருவாக உள்ளது. இது இந்திய திரைப்படத் துறையின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கேவின் பயோபிக் தொடராக வெளிவர உள்ளது. இதில், தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தொடரின் படப்பிடிப்பு இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு துவக்கத்தில் ஆரம்பமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com