மீண்டும் இணைந்த ஜூனியர் என்டிஆர் - இயக்குனர் திரி விக்ரம் கூட்டணி

நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீண்டும் இணைந்த ஜூனியர் என்டிஆர் - இயக்குனர் திரி விக்ரம் கூட்டணி
Published on

‘அரவிந்த சமேதா வீர ராகவா’ படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் - இயக்குனர் திரி விக்ரம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் கடைசியாக 'தேவரா' படத்தில் நடித்திருந்தார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடித்திருந்த இப்படம் ரூ. 500 கோடிக்கு மேல் வசூலித்தது. இப்படத்தை தொடர்ந்து, ஜூனியர் என்.டி.ஆர், ‘கே.ஜி.எப்’ புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘டிராகன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர்-க்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ரவி பஸ்ரூர் இசை அமைக்கிறார். மேலும், இந்தப் படத்திற்காக ஜூனியர் என்டிஆர் வெறும் 20 நாட்களில் சிக்ஸ்-பேக் உருவாக்கியிருப்பதும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் கூட்டணியில் உருவாகி வரும் இந்த படம் அடுத்த ஆண்டு 2027 ஜூன் 11ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜூனியர் என்டிஆரின் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் திரி விக்ரம் இயக்க, நாக வம்சி தயாரிக்கிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கவுள்ளார். கடவுள் பின்னணியில் இப்படம் உருவாகவுள்ளதாகத் தெரிகிறது. ‘அரவிந்த சமேதா வீர ராகவா’ படத்திற்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் - இயக்குனர் திரி விக்ரம் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

‘புஷ்பா 2’ படத்துக்குப் பிறகு, திரி விக்ரம் இயக்கவுள்ள படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் அதற்கு நேரம் அதிகம் தேவைப்படுவதாக கூறி, அட்லி படத்தின் பணிகளை தொடங்கினார் அல்லு அர்ஜுன். அல்லு அர்ஜுனுக்காக தயார் செய்யப்பட்ட அக்கதையில்தான் தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com